தற்போதைய செய்திகள்

ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வீடியோக்கள் - மத்திய அரசு புதிய உத்தரவு

தந்தி டிவி

ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வீடியோக்களில் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் வரும் பொழுது "புகையிலை எச்சரிக்கை வாசகம்" கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று உலக புகையில்லா நாளை முன்னிட்டு, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி, ஒடிடி தளங்களில் புகை பிடிப்பது உள்ளிட்ட புகையிலை சார்ந்த காட்சிகள் வரும் பொழுது கட்டாயம் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒலி ஒளி வடிவிலான வீடியோவை குறைந்தபட்சம் 20 நொடிகளுக்காவது கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்