தற்போதைய செய்திகள்

திரைப்பட விநியோகஸ்தர் கடத்தல் - யோகி பாபு பட தயாரிப்பாளருக்கு போலீஸ் வலைவீச்சு

தந்தி டிவி

திரைப்பட விநியோகஸ்தரின் ஆட்களை கடத்திய வழக்கில் யோகி பாபு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஷூ என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கான சேட்டிலைட் உரிமத்தை, படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக், சாலிகிராமத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் மதுராஜ் என்பவருக்கு விற்றதாக தெரிகிறது.

ஆனால் சொல்லியபடி மதுராஜ் பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுராஜின் அலுவலக ஊழியர்களை காரில் கடத்தி அவர்களை அடித்து மிரட்டியதாகவும், அவர்களது வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மதுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்