தற்போதைய செய்திகள்

எப்பொழுதும் போனில் பேசி கொண்டிருந்த மகள்.. திட்டிய தாய்..மகள் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

நாட்டறம்பள்ளி அருகே அதிக நேரம் செல்போனில் பேசி கொண்டிருப்பதை தாய் கண்டித்ததால் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வசித்து வருபவர் மனோன்மணி. இவர் தன் மகள் சரண்யாவை அதிக நேரம் செல்போன் பேசிக் கொண்டே இருப்பதாக கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில், விரக்தி அடைந்த சரண்யா கடந்த 11 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

பின், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தது உறவினர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சரண்யாவின் சகோதரி கார்த்திகா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்