தற்போதைய செய்திகள்

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கண்ணெதிரே கொன்ற தாய்... அடுத்து தாய் எடுத்த முடிவு -கிருஷ்ணகிரியில் பயங்கரம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோழிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு தெய்வா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், குணசேகரன் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இதில், மாமானார் மாமியாருடன் வசித்து வந்த தெய்வாவுக்கும், அவரது கணவருக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நேரமாகியும் தெய்வாவின் அறை பூட்டப்பட்டிருந்ததால், அதிர்ச்சியடைந்த மாமியார் அக்கம்பக்கத்தினரை அழைத்துக்கொண்டு கதவை உடைத்துள்ளார். அப்போது, கட்டிலில் இரண்டு குழந்தைகள் மயங்கிய நிலையில் சடலமாகவும், தெய்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில், இரு குழந்தைகளையும் தாய் விஷம் கொடுத்து கொன்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்ர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்