தற்போதைய செய்திகள்

அம்மா வீட்டில் கர்ப்பிணி மனைவி.. கேப்பில் கிடா வெட்டிய கணவன்.. கம்பி எண்ண வைத்த மனைவி

தந்தி டிவி

ஓமலூர் அருகே மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ராஜவாய்க்கால் பகுதியை சேர்ந்த தம்பதி பிரவீன்குமார் மற்றும் குமுதா. இருவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், குமுதா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தீடீர் தகராறால் குமுதா அவர்களுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆகியும் தன்னை அழைத்து செல்ல யாரும் வராத நிலையில், பிரவீன்குமார் ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வருவது குமுதாவிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, நாங்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக பிரவீன் கூறியதை கேட்டு குமுதா அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த பெண்னுடன் கடந்த அக்டோபர் மாதம் பிரவீன்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக குமுதா போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், பிரவீன்குமாரை தேடி வந்த போலீசார், பெங்களூருவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்