தற்போதைய செய்திகள்

கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை... காப்பாற்ற குதித்த தாயும் பரிதாப பலி - சேலம் அருகே சோகம்!

தந்தி டிவி

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றபோது தாயும்,சேயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சேலம் மாசிநாயக்கன்பட்டி வாத்தியார் காடு பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வினோத்தின் மனைவி மீனா, தென்னந்தோப்பிற்கு நீர் பாய்ச்சுவதற்காக, மின் மோட்டார் ஆன் செய்ய குழந்தை சுபஸ்ரீ உடன் சென்றார். அப்போது கிணற்றில், குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிய தாய், குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். மீனாவிற்கு நீச்சல் தெரியாத நிலையில் தாயும், சேயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தாய், சேய் இருவரையும் சடலமாக மீட்டனர். இருவரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்