தற்போதைய செய்திகள்

"முதல்வர், எம்.பி., அமைச்சர் என எல்லா இடங்களிலும் இளைஞர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம்..." பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தந்தி டிவி

இளைஞர்கள் அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசம் மாநிலம் மண்டியில் பாரதிய ஜனதா கட்சியின் விஜய் சங்கல்ப் பொதுக் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இங்கு உள்ள இளைஞர் சக்தியானது, பல்வேறு துறைகளில் நாட்டை பெருமைப்படுத்துவதற்கான வாய்ப்பை எப்போதும் அளித்துள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.

இளைஞர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குவதே பாஜகவின் முன்னுரிமையாக இருந்து வருகிறது என்றும், முதல்வர், எம்.பி., அமைச்சர் என எல்லா இடங்களிலும் இளைஞர்கள் அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் அரசியல் கட்சி பாஜக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதாரம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய ஊக்கத்தைப் பெறப் போகும் துறை சுற்றுலாத்துறை என கூறியுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்