தற்போதைய செய்திகள்

மிரட்டும் குரங்கு அம்மை.. "வேணாம்.. உடலுறவு வச்சுக்காதீங்க" - வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

பிரிட்டனில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் 555 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் அதிகளவு பாதிப்பு உள்ளது. அந்நாட்டில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும் போது மற்றவர்களுக்கும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் பாலியல் உறவு கொள்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கு அம்மையால் பொதுமக்களுக்கான சுகாதார பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக அறிகுறி இருந்தால் மருத்துவரை உடனடியாக நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Supreme Court | Central Govt | TNGovt | மத்திய அரசிடம் ஒப்படைக்க.. தமிழக அரசுக்கு உத்தரவு

BREAKING || "வெற்றியோ.. தோல்வியோ.. சீமான் தவிர்க்க முடியாத தலைவர்" - கோர்ட் அதிரடி

Chengalpattu Crime | கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொ*ல செய்த கணவன் | நெஞ்சை உலுக்கும் சோகம்

MK Alagiri | Kayalvizhi | TN Police | வங்கி அதிகாரியை தாக்கிய வழக்கு - மு.க.அழகிரியின் மகள் ஆஜர்

BREAKING || ரயில் `தட்கல்’ டிக்கெட் எடுப்பதில் வரப்போகும் அதிரடி மாற்றம் - பயணிகள் கவனத்திற்கு