தற்போதைய செய்திகள்

"அம்மா என்ன கடத்திட்டாங்க..!" கடத்தல் நாடகம் போட்ட இளம்பெண் -தாயை கதறவைத்த மகளை பதறவிட்ட போலீசார்.!

தந்தி டிவி

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, தாயிடம் கடத்திவிட்டதாகக் கூறி நாடகமாடிய பெண்ணை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை வியாசார்பாடியை சேர்ந்த ராணி என்பவரின் செல்போனுக்கு தொடர்புகொண்ட அவரது மகள், தன்னை மர்மநபர்கள் பூந்தமல்லியில் கடத்தி விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி, இதுதொடர்பாக பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ராணியிடம் தொடர்புகொண்ட செல்போன் எண்ணை வைத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் வந்ததால், போலீசார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் செல்போன் சிக்னலை வைத்து, கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தப்ப​ட்டதாக கூறப்படும் நபர்களிடம், கடையில் இளம்பெண் மகிழ்ச்சியாக தேநீர் அருந்திய சிசிடிவி காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், ​தாயிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிப்பதற்காக, மகளே கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்ததை அடுத்து, அந்தப் பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..