தற்போதைய செய்திகள்

மாடலிங் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கேரள மாநிலம் கொச்சியில், ஓடும் காரில் மாடலிங் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைதான தோழி உட்பட 4 பேரையும், 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், மாடலில் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 17ம் தேதி இரவு, ஆண் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் இருந்த இளம்பெண்ணை, அவரது தோழி உட்பட ஆண் நண்பர்கள் 4 பேர், வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழயில் ஆண் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விவேக், நிதின், பெண் தோழி டிம்பிள் லம்பா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த 4 பேரையும், 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்