தற்போதைய செய்திகள்

"முதல்வர் ஸ்டாலினின் முன்னோர்கள் பணியாற்றிய கோயிலில் மக்களுக்காக.." - அமைச்சர் கொடுத்த உறுதி

தந்தி டிவி

முதலமைச்சரின் மூதாதையர்கள் பணியாற்றிய கோயிலில் இருந்த மரகத லிங்கத்தை மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், முதலமைச்சரின் தாத்தா பணியாற்றிய கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம், காணாமல் போய், பின்னர் மீட்கப்பட்டதாகவும் அதனை பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரின் மூதாதையர்கள் பணியாற்றிய கோயிலில் இருந்த மரகதலிங்கம், தற்போது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், உரிய ஆவணங்களை ஒப்படைத்த பின்னர், கோவிலில் வைக்கப்பட்டு மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்