தற்போதைய செய்திகள்

"மீண்டும் உங்களை திமுகவில் எதிர்பார்க்கலாமா..?" - மு.க.அழகிரி சொன்ன பதில்

தந்தி டிவி

"மீண்டும் உங்களை திமுகவில் எதிர்பார்க்கலாமா..?" - மு.க.அழகிரி சொன்ன பதில் 

மதுரையில் மு.க.அழகிரியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக மதுரை வந்துள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மதுரையில் உள்ள மு.க.அழகிரியை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, வாழ்த்து பெற்றார். வீட்டின் வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின் முதல் முறையாக அவரது பெரியப்பாவான மு.க.அழகிரியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பெரியப்பாவை சந்திக்க உதயநிதி வருவதாக, மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்