தற்போதைய செய்திகள்

காணாமல் போன சிறுவன் வீட்டில் சடலமாக மீட்பு ...உடலை தர மறுத்து தாய் தீக்குளிக்க முயற்சி - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி

மதுரையில் 4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் நித்யா. இவருடைய கணவர் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், தனது 4 வயது மகன் லோகேஷுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென பகல் 12 மணியளவில் குழந்தையை காணவில்லை என கூறி உறவினர்கள் அனைவரும் தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது, வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் லோகேஷ் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், குழந்தையை ஒப்படைக்க மறுத்து தாய் தீக்குளீக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்