தற்போதைய செய்திகள்

கோவையில் மாயமான 12 வயது சிறுமி பொள்ளாச்சியில் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் 12 வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமானதாக கூறி பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஒண்டிபுதூர் பேருந்து நிலையத்தில் சிறுமி பேருந்துக்காக காத்திருந்த சிசிடிவியை கைப்பற்றிய நிலையில், தீவிர விசாரணை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட போலீசார், அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போனில் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த சிறுமியை, ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாக அவரின் தாய் திட்டியதால், சிறுமி வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சிறுமியை மீட்டு அவரின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கும் போது, அனைவரும் கைதட்டி தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்