தற்போதைய செய்திகள்

"மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?"... மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தந்தி டிவி
• சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார். • இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தொடர்ந்து, அழுத்தம் அளித்ததால் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார். • இதைத்தொடர்ந்து பேசிய தங்கமணி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்காதது ஏன் என்றும் வினா எழுப்பினார். • அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக அரசாணை தான் போட்டது என்றும், தற்போது அதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்றார். • விரைவில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என பதில் அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்