தற்போதைய செய்திகள்

காவல் நிலையத்திற்குள் மோதிக்கொண்ட அமைச்சர் நேரு, எம்.பி சிவா ஆதரவாளர்கள் - போராடிய பெண் போலீஸ்

தந்தி டிவி

திருச்சி நீதிமன்ற அமர்வு காவல்நிலையத்திற்குள் திருச்சி சிவா மற்றும் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட காட்சிகளின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திமுக எம்பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற அமர்வு காவல்நிலைய போலீசார், 10 பேரை அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையத்தின் உள்ளே இரு தரப்பினரும் மோதி கொள்ள முயற்சித்தனர்.

அப்போது அங்கு இருந்த பெண் காவலர் சாந்தி காவல் நிலையத்திற்குள் வராமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பெண் காவலர் தடுப்பையும் மீறி உள்ளே சென்று, இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவலர் சாந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்