தற்போதைய செய்திகள்

மினி லாரி கவிழ்ந்து சிதறிய பீர் பாட்டில்கள் - அள்ளி சென்ற மதுப்பிரியர்கள்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நரசிபட்டணம் புறப்பட்டு சென்றது. சற்று தூரம் சென்ற நிலையில் அந்த மினி லாரி திடீரென்று சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் அதில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 200 பெட்டி பீர் பாட்டில்கள் சாலையில் விழுந்து புரண்டு ஓடின. இதனை பார்த்த குடிமக்கள் போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் பீர் பாட்டில்களை அள்ளி செல்ல முயன்ற மேலும் சில குடிமக்களை கட்டுப்படுத்தி அவர்களிடம் இருந்து பீர் பாட்டில்களை வாங்கி பத்திரப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்