தற்போதைய செய்திகள்

மண்டை ஓட்டு மாலையுடன் நள்ளிரவில் அகோரிகள் நடத்திய பூஜை

தந்தி டிவி

திருச்சி அருகே, மண்டை ஓட்டு மாலையுடன் அகோரிகள் நள்ளிரவில் நவராத்திரி பூஜை நடத்தினர்.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலை அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய முதல்நாள் முதல் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெய் அகோரகாளிக்கு குருதி அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

நள்ளிரவில் நடைபெற்ற மகா ருத்ரா யாகத்தின் போது அகோரி மணிகண்டன் மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டு ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி மந்திரங்களை ஜெபித்து பூஜை செய்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்