முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்குச் சென்ற அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.