தற்போதைய செய்திகள்

மேகாலயா முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்பு

தந்தி டிவி

மேகாலயா முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்பு

• மேகாலயா முதலமைச்சராக இரண்டாவது முறையாக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார்.சமீபத்தில் நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்ற கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. • இந்நிலையில், ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மீண்டும் முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார். • அவருக்கு ஆளுநர் பஹூ சவுஹான் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். • பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். • கன்ராட் சங்மாவுடன் இணைந்து 12 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்று உள்ளது. • பதவியேற்பு விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோதியுடன் இணைந்து புதிய அமைச்சரவைக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ