தற்போதைய செய்திகள்

மேகதாதுவில் அணை..டி.கே.சிவக்குமாருக்கு ஈபிஎஸ் கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அணையைக் கட்ட தீவிரமாக இறங்கியதன் ரகசியம் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சியைக் கடுமையாக கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனம் ஆகாமல் தடுக்க அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்