தற்போதைய செய்திகள்

10 ஆவது மாடியில் இருந்து குதித்து MBBS மாணவி தற்கொலை..பகீர் கிளப்பிய மாணவி எழுதிய கடிதம் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் அருகே அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ. இவர் கேகே நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், தான் வசித்து வந்த வீட்டின் 10 ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து நித்யா ஸ்ரீ தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும், அடுத்த மாதம் யூரோப் செல்ல பெற்றோர் திட்டமிட்டுள்ள நிலையில், மகிழ்ச்சியாக சென்று வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை