தற்போதைய செய்திகள்

63 வயதில் MBBS மாணவி...வெளிச்சத்திற்கு வந்த ஒளிந்திருந்த திறமை - தந்தி டிவிக்கு அமைச்சர் புகழாரம்

தந்தி டிவி

காரைக்காலில் 63வயது மூதாட்டி சுஜாதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் செய்தி நமது தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த செய்தியை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, "ஒளிந்துகிடக்கும் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் முந்தி நிற்கிறது தந்தி" என புகழாரம் சூட்டியுள்ளார்.

மகளிரின் சாதனைகளை வெகுஜன ஊடகத்தில் உலவவிட்டு பெண்ணிய சமத்துவத்தை தாங்கிப்பிடிக்கும் தந்தி டிவிக்கு பாராட்டுகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காரைக்கால் அம்மையாரின் மண்ணில் உருவாகும் அப்பெண்ணின் சாதனை வியக்க வைப்பதாக அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு