தற்போதைய செய்திகள்

ஆண் நண்பருடன் நெருக்கம்!.. கண்டித்த கணவன் கழுத்தை அறுத்த மனைவி!.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், சிக்கல் பகுதியை சேர்ந்த தாட்சாயிணி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. • கடந்த 5ம் தேதி, தாட்சாயணி, தனது ஆண் நண்பர் ராஜசேகருடன் சேர்ந்து, சரவணனை கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். • இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாட்சாயிணி மற்றும் ராஜசேகரை போலீஸார் கைது செய்தனர். • பின்னர் விசாரணையில், திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்ததும், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் சரவணனுடன் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. • ராஜசேகருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த சரவணன், மனைவி தாட்சாயிணியை கண்டித்துள்ளார். • இதில் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகருடன் சேர்ந்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. • இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்