தற்போதைய செய்திகள்

காதலியை அபகரித்த எஸ்ஐ... விரக்தியில் இளைஞர் விபரீதம்

தந்தி டிவி
• குவைத் நாட்டுல வேல பாத்துட்டு வந்த தமிழக வாலிபர், ஆடியோ ஆதாரம் வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்காரு... நிச்சயம் செய்த பிறகு போலீஸ் மாப்பிள்ளை தான் வேண்டும் என 10 வருட காதலி அந்தர்பல்டி அடித்ததால் நடந்த சோகம் இது.... • இந்த டயலாக்கில் வருவது போல அடுத்தவன் காதலியை சைடு கேப்பில் ஆட்டையை போட்ட காக்கிச்சட்டையின் அபத்தமான செயலால், தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார் இங்கொரு அப்பாவி இளைஞர். • 10 வருட காதலை துட்சமென தூக்கி எறிந்து விட்டு, நிச்சயம் நடந்த பிறகும் 10 நாள் பழக்கத்தில் போலீஸ் மாப்பிள்ளையோடு ஊர் சுற்றி உல்லாசமாக இருந்திருக்கிறார் அந்த காதலி. • காதலியை அபகரித்ததோடு, இந்த கபட நாடகங்களை பற்றி அறியாமல் குவைத்தில் வேலை பார்த்து வந்த இளைஞருக்கு போன் செய்து மிரட்டி இருக்கிறார் அந்த போலீஸ் மாப்பிள்ளை... • காதலியின் இந்த திடீர் மனமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தான், இந்த மொத்த கூட்டமும் கண்ணீரும் கம்பலையுமாய் கலங்கி நிற்கிறது. • இறந்து போனது, மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தை சார்ந்த சரத்குமார். 27 வயதான இவர் குவைத் நாட்டில் கடந்த நான்கு வருடமாக ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்பாங்கூர் கிராமத்தைச் சார்ந்த சங்கீதா என்ற இளம்பெண்ணும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். • இருவரும் ஓரே சமூதாயம் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். அதன்படி கடந்த மாதம் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்திருக்கிறது. • இதற்கிடையில் தான் கடந்த மாதம் சங்கீதாவின் இருசக்கர வாகனம் திருடு போயிருக்கிறது. இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு கொடுக்க சென்றுள்ளார். • வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி என்பவர், சங்கீதாவிடம் பழகியுள்ளார். எண்ணி பத்தே நாளில் இருவரின் பழக்கமும் காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. • டிரைவர் மாப்பிள்ளையை விட போலீஸ் மாப்பிள்ளை எவ்வளவு மேல் என நினைத்த சங்கீதா, 10 வருட காதலை கைகழுவி விட்டு, சூரிய மூர்த்தியோடு டூயட் பாடி இருக்கிறார். • இது குறித்து வீட்டில் கூற மகளின் முடிவு தான் தங்களின் முடிவும் என சங்கீதாவின் பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த தைரியத்தில் உடனே குவைத்தில் இருந்த சரத்குமாருக்கு தகவல் தெரிவிக்கிறார் சங்கீதா. • ஆனால் அதை சரத்குமார், நம்ப வில்லை...“பொய் சொல்லாதே பேபி“ என மெசேஜில் காதலியிடம் மன்றாடி இருக்கிறார். ஆனால் "எங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது, அந்த குற்ற உணர்ச்சியோடு உன்னோடு வாழ முடியாது" என நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் பேசி இருக்கிறார் அந்த உத்தம காதலி சங்கீதா. • அத்துடன் சூரியமூர்த்தி அரசாங்க மாப்பிள்ளை, அவரை திருமணம் செய்தால் லைஃப் செட்டிலாகி விடும், ஆனால் உன்னை திருமணம் செய்தால் நான் காலம் முழுவதும் கஷ்ட பட வேண்டும் எனவும் கூறி சரத்குமாரை வேதனையடைய வைத்துள்ளார். • போதாத குறைக்கு உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியுடன் ஒன்றாக இருக்கும் போது சரத்குமாருக்கு வீடியோ கால் செய்தும் மிரட்டி உள்ளனர். • எந்த காதலனும் பார்க்க கூடாத கொடூரத்தை சங்கீதா, சரத்குமாருக்கு காட்டி இருக்கிறார்.மேலும் அடிக்கடி சங்கீதாவை விட்டு விலகும் படி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார் சூரியமூர்த்தி. இதனால் மனமுடைந்தவர் வாழவே பிடிக்காமல் பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு குவைத் நாட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். • இந்த சம்பவம் உறவினர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, உடனே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் குவைத் நாட்டில் இறந்த சரத்குமாரின் உடலை மீட்டு மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். • அத்துடன் இறந்த சரத்குமாரின் உடலை நாங்கள் பெறுவதற்கு முன் இறப்பிற்கு காரணமான எஸ் ஐ சூரியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். • சரத்குமார் குவைத் நாட்டில் சம்பாதித்த 15 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை சங்கீதாவிடம் கொடுத்ததாகவும், அதை திரும்ப தர வேண்டும் எனவும் கூறி உள்ளனர். • இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எஸ் ஐ சூரியமூர்த்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். • உலகமே எதிர்த்தால் உறுதியாய் நின்று திருமணம் செய்து கொள்ளும் பல உண்மைக்காதலர்களுக்கு மத்தியில், காதல் எல்லாம் வெறும் கானல்... காசுக்கு தான் இங்கே காலம்... என்பதை சங்கீதா போன்ற சில காதலிகள் நிரூபித்துவிடுகிறார்கள் என பலரும் மனம் வருந்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி