தற்போதைய செய்திகள்

மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

தந்தி டிவி

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகராட்சி ஆணையர் சிம்ரம் ஜித் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனிடையே மே 5ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்