தற்போதைய செய்திகள்

மகளின் காதலனுக்கு ஆசை காட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கர்நாடகாவை உலுக்கிய ஆணவக்கொலை

தந்தி டிவி

கர்நாடகாவில் மாற்று சாதி இளைஞரை காதலித்த இளம்பெண்ணையும், அவரது காதலரையும் பெண்ணின் தந்தையும், உறவினர்களும் சேர்ந்து ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பீவினமட்டி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத்தும், ராஜேஸ்வரியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சாதியினை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு விஸ்வநாத்தையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து விஸ்வநாதனின் குடும்பத்தார், அவரை கேரளாவிற்கு அனுப்பி வைத்தாலும், இருவருக்குமிடையேயான காதல் தொடர்ந்துள்ளது. இதனையறிந்த ராஜேஸ்வரியின் தந்தை பரசப்பா, காதலை கைவிடும்படி தனது மகளிடம் கேட்க, அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து தனது மகளோடு திருமணம் செய்து வைப்பதாக கூறி விஸ்வநாத்தை ஊருக்கு அழைத்த பரசப்பா, அவரையும், தனது மகளையும் உறவினர்களோடு சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து, உடல்களை சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசியுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணையில் நடத்திய போலீசார், பரசப்பா உள்ளிட்ட 4 பேரை கைது செய்ததோடு, தலைமறைவாகவுள்ள மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?