சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம், வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை, இயக்குநர் மணிரத்னம் அவமதித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறையிடம் அளித்த புகார்களில், நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.