தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு

தந்தி டிவி

வன்முறையால் பாதிக்கப்பட்ட, மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதன்படி, மாநிலம் முழுவதும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பிரேன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, மைதேய் மற்றும் குக்கி சமூக‌ங்களால் அமைக்கப்பட்ட அனைத்து பதுங்கு குழிகளையும் அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. விவசாயப் பணிகள் தடையின்றி தொடர, விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது என்றும், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்