தற்போதைய செய்திகள்

மங்களூரு வெடி விபத்து சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தந்தி டிவி

மங்களூரு வெடி விபத்து தொடர்பாக, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஷாரிக் என்பவர், படுகாயமடைந்த நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாரிக்கிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். ஷாரிக் வாடகை எடுத்து தங்கியிருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவை அனைத்தும் தடவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு