தற்போதைய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்... அக்கா, தங்கை எடுத்த விபரீத முடிவு - மணப்பாறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருச்சி அருகே, காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைமந்த 2 சகோதரிகள், கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர் • மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த சகோதரிகளான வித்யா மற்றும் காயத்ரி, திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். • கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். • சகோதரிகள் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி விசாரித்துள்ளார். • அப்போது இருவரும், தங்களுடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர். • அதிர்ச்சி அடைந்த தாய், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். • இதில் மனமுடைந்த சகோதரிகளான வித்யாவும், காயத்ரியும், வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். • இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்