தற்போதைய செய்திகள்

பள்ளி தோழியை காதலித்தவர் கொலை...ஜாதி மாறிய காதலால் வெறிச்செயலா...?

தந்தி டிவி

சடலமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த அப்புவிளை கிராமத்தை சேர்ந்த முத்தையா.19 வயதாகும் இவர் 12 ஆம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, சங்கனான்குளம் கிராமத்தில் உள்ள திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணியளவில் நண்பர்களை சந்திக்க செல்வதாக கூறிய முத்தையா, அதன்பிறகு இப்படி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.முத்தையாவின் உடலில் இருந்த காயங்கள் நடந்திருப்பது கொலை தான் என போலீசாருக்கு சான்றளித்துள்ளது. உடனே கொலைக்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் ஆணவக்கொலை, கஞ்சா மோதல் என பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ஆம்.... முத்தையாவும் இட்ட மொழியை சேர்ந்த சுதா என்ற இளம்பெண்ணும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். முத்தையா படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றவுடன் சுதாவும் அதே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். கல்யாண பத்திரிக்கை அடிக்கும் இடத்தில் இருவரும் காதல் வளர்த்திருக்கிறார்கள். அந்த காதல் விவகாரம் சுதாவின் வீட்டாருக்கு தெரிய வர கொதித்து போயிருக்கிறார்கள்."செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கு என் வீட்டு பொண்ணு கேக்குதா" என முத்தையாவை மிரட்டி சுதாவுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

அந்த சோகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், முத்தையா தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த சுதா, குடும்பத்தாரை எதிர்த்துக்கொண்டு முத்தையாவுடன் பைக்கில் ஊர் சுற்றி வந்திருக்கிறார். 3 முறை முத்தையாவின் வீட்டிற்கே வந்து சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று மதியமும் சுதாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. அதன் பிறகு தான் முத்தையாவுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது. எனவே காதலை கைவிடாத கோவத்தில் சுதாவின் குடும்பத்தினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் முத்தையா கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர் என்று சொல்லப்படுகிறது. வேலை நேரம் போக மத்த நேரத்தில் போதையை போட்டு கொண்டு மிதப்பது இவரது பொழுதுபோக்கு. அதுமட்டுமின்றி கஞ்சா விற்பனையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.சம்பவம் நடந்த அன்று இரவு நண்பர்களை சந்திப்பதாக சொல்லிவிட்டே வெளியே சென்றுள்ளார் முத்தையா. இதனால் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முத்தையா அடித்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்