தற்போதைய செய்திகள்

களைகட்ட போகும் மாமல்லபுரம்.. கடற்கரையில் பறக்கப்போகும் ராட்சத பட்டங்கள்

தந்தி டிவி

2வது ஆண்டாக சர்வதேச காற்றாடித் திருவிழா மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும், தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்க விடப்பட உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் வகையில் பல வண்ணங்களில் 4 நாட்கள் காற்றாடித் திருவிழா நடைபெற உள்ளது. 3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு