தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம் - காவலர் ரேவதி பரபரப்பு சாட்சியம்

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை சம்பவத்தின் போது காவல்நிலையத்தில் இல்லை என ஆய்வாளர் தரப்பு வாதம் செய்தது. சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரும் நேரில் ஆஜராகினர். நீதிபதி முன்னிலையில், முக்கிய சாட்சியான காவலர் ரேவதியிடம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறுக்கு விசாரணை நடத்தியது. தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது காவல்நிலையத்தில் இல்லை என்றும் சக காவலர்களை தூண்டவில்லை எனவும் மறுத்து வாதிட்டனர். பின்னர் சாட்சியம் அளித்த காவலர் ரேவதி, ஆய்வாளர் காவல்நிலையத்தில் தான் இருந்தார் என்றும் மற்ற காவலர்களை தொடர்ந்து தூண்டிவிட்டு, இருவரையும் அடித்து கொலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கானது வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்