தற்போதைய செய்திகள்

"உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்?" - மத்திய தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் கேள்வி

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், புராதன சின்னங்கள், கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என, அதிருப்தி தெரிவித்தது.

10 ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை எனவும், உயர் நீதிமன்ற கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என பலமுறை நினைவூட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. இதனிடையே, போதுமான பணியாளர்கள் இல்லை என்று, தொல்லியல் துறையில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மத்திய தொல்லியல் துறையில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர்?, பணிகளை முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? என கேள்வி எழுப்பி, வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்