யாருக்கு தபால்? எதற்கு பெட்டி? -நெட்டிசன்கள் கேள்வி | அடுத்தடுத்து தொடரும் சர்ச்சை...
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நுழைவுவாயில் கதவில் தபால் பெட்டி வைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை பகிரும் நெட்டிசன்கள், கட்டடம், எந்தவித வேலைகளோ நடைபெறாமல் இருக்கும் இடத்தில் யாருக்கு தபால் வர போகிறது எனவும் எதற்காக தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.