தற்போதைய செய்திகள்

குடும்பத்துடன் பலகாரம் செய்யும் மஹிந்த ராஜபக்சே- தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி
• இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். • தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில், அதை கொண்டாட முடியாத அளவுக்கு வறுமை அங்கே தலைவிரித்தாடுகிறது. • இந்த நிலையில்தான் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் அமர்ந்து புத்தாண்டு பலகாரம் செய்து மகிழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. • இந்த வீடியோவில் மஹிந்த ராஜபக்சேயின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே பலகாரங்கள் செய்ய, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே அதை சுவைத்துக் கொண்டிருக்கிறார். • மஹிந்த ராஜபக்சேவின் மாளிகையில் ஒரு பகுதியிலேயே இந்தக் காட்சி அரங்கேறியதாக கூறப்படுகிறது. • நாடே துயரத்தில் இருக்கும் போது இவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்ற ரீதியிலேயே இலங்கை மக்கள் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். • ஆனால், தமிழகத்தில் சிலர் மிகச் சாதாரணமாக தோற்றமளிக்கும் இந்த அறையைப் பார்த்து, மகிந்த ராஜபக்சே... தான் செய்த தவறுகளுக்கெல்லாம் சேர்த்து தற்போது கஷ்டப்படுவதாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?