தற்போதைய செய்திகள்

மோசடி செய்த மந்திரவாதி தம்பதி..கன்னியாகுமரியில் பரபரப்பு

தந்தி டிவி

இரணியல் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர், நாகர்கோவில் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், வெள்ளிச்சந்தை கல்லடி விளை பகுதியை சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகிய இருவரும், வாஸ்து மற்றும் பரிகார பூஜை செய்து தருவதாக தன்னை நாடியதாக தெரிவித்திருந்தார். மேலும், அந்த தம்பதியர் திருவனந்தபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் வட்டி மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்ததால், அதனை நம்பி மூன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் முதலீடு செய்து பல மாதங்கள் ஆன பிறகும், வட்டியும், அசலையும் திருப்பித் தராமல் இருவரும் மாயமனாதாகவும், பணத்தை மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிந்துஜா தனது மனுவில் கோரியிருந்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மந்திரவாதி சைஜூவை கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவி வனிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு