தற்போதைய செய்திகள்

திருமணத்துக்கு செல்லும் வழியில் திடீரென வெடித்த வேன் டயர் - 3 சிறுவர்கள் பரிதாப பலி.. 20 பேர் கவலைக்கிடம்

தந்தி டிவி

மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த படூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக, பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த மினிவேனில் சுமார் 25 பேர் சென்னை வந்தனர்.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி அருகே சென்று கொண்டிருந்தபோது, டயர் வெடித்ததில், மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மற்றவர்கள், மதுராந்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்