தற்போதைய செய்திகள்

2 மாத முன் தாய் தற்கொலை..பாம்பு கடித்து பலியான குழந்தை...உருக்குலைந்த குடும்பம் | Madurai

தந்தி டிவி

மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன், ஃபிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி, அதே கிராமத்தில்100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார். பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், விரக்தியடைந்த நாகலட்சுமி, 2 மாதங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, 5 குழந்தைகளையும் கணேசன் பாராமரித்து வந்த நிலையில், குழந்தைகள், விஜயதர்ஷினி, சண்முகப்பிரியா ஆகியோர், நேற்று வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துள்ளனர். அப்போது இருவரையும் பாம்பு கடித்துள்ளது. இதில் குழந்தைகள் அலறியபடி மயங்கினர். குழந்தைகளை மீட்டு உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சண்முகப்பிரியா சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்