தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் மனைவி, பிள்ளைகள் கிடந்த கோலத்தை கண்டு விஷம் குடித்த கணவன் - மதுரையை உலுக்கிய சம்பவம்

தந்தி டிவி

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி அய்யனார்.

இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.

வேலை மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் இரு மகன்களான ஹரிகிருஷ்ணன் மற்றும் குபேர கிருஷ்ணன் என மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.

வீட்டின் கதவை தட்டி வெகு நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற அய்யனார், மனைவி மற்றும் மகன்கள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அய்யனாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு