தற்போதைய செய்திகள்

யாரு நீங்கள்லாம்? எங்கே இருந்து வர்றீங்க? - இணையத்தில் தினுசு தினுசாக வீடியோ வெளியிடும் திவாகர்

தந்தி டிவி

இவரை போல நடிகனாகணும் என கோடம்பாக்கம் நோக்கி கிளம்பி வருவோருக்கு மத்தியில் நடிகர் திலகமே எனக்குள்ள தான் இருக்காரு என்ற பாணியில் எங்கு பார்த்தாலும் அபிநயம் காட்டியும், டான்ஸ் ஆடியும் பதிவு செய்யும் வீடியோக்களால் ரசிகர்களின் வசவுகளுக்கு ஆளாகி இருக்கிறார் ஒரு யூட்யூபர்.. யார் அவர்..? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இந்த ஒரு வீடியோ தான் மதுரையை சேர்ந்த திவாகரை எல்லா யூட்யூபர்களும் விதம் விதமாக பேட்டி எடுத்து இணையத்தையே கதற விடும் அளவுக்கு மாற்றியிருக்கிறது...

அட.. பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே என நினைத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் மூவ்மெண்ட் என்ற பெயரில் அவர் செய்யும் அட்ராசிட்டிகளை தாங்கவே முடியவில்லை...

அதிலும் திவாகரிடம் சிக்கி அதிகம் நொந்து போனது தனுஷ் ரசிகர்கள்..

ஏதோ புளிப்பு மிட்டாயை சாப்பிட்டது போல அவர் கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்து பதறிப்போனது இணைய உலகம்....

சிம்பு, அர்ஜூன், அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என டாப் நடிகர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை திவாகர்...

எடுக்கும் வீடியோக்கள் எல்லாமே சிங்கிள் ஷாட் தான்.. என்னோட நடிப்புக்கு இணைய உலகமே அடிமையப்பா என திகில் கிளப்பி வருகிறார் திவாகர்...

முகத்தை அஷ்ட கோணலாக்கி அவர் கொடுக்கும் ரியாக்சன் எல்லாம் க்ரிஞ்ச் வகையறா என குமுறுகிறார்கள் இணையவாசிகள்.. கடைசியில் அவர் ரஜினியையும் விட்டு வைக்காமல் தில்லானா தில்லானா பாட்டுக்கு போட்ட ஸ்டெப்பை பார்த்தால் வார்த்தைகள் வரவில்லை பலருக்கு...

படித்தது பிஸியோதெரபி.. அதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்ட திவாகருக்கு ஏன் இந்த வில்லங்க ஆசை வந்தது? நடிப்பு சூறாவளியாக மாற என்ன தான் காரணம் இருக்கும்? என கேள்விகளால் திவாகரை துளைத்து வருகிறார்கள் பலரும்...

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்