தற்போதைய செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது.. பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார்

தந்தி டிவி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறை பேராசியராக பணியாற்றி வரும் கருப்பையா, அங்கு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனையடுத்து, மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து புகார் அளித்தனர். அதன் பேரில், மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் கருப்பையாவை கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்