தற்போதைய செய்திகள்

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நிகழ்வு - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தந்தி டிவி

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று அதிகாலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திர உபசாரம் நடந்தது. பின்னர், கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த நாரை பறக்கவிடப்பட்டது. மண்டூக முனிவரின் உருவச்சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்