தற்போதைய செய்திகள்

பரிகார பூஜை செய்வதாக பலே திருட்டு.. தோஷம் கழிப்பதாக கூறி நகை பணம் அபேஸ்.. - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தந்தி டிவி
• மதுரை அருகே பரிகார பூஜை செய்வதாக நகை, மற்றும் பணத்தை நகையை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • நிலையூரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது வீட்டிற்கு காவி உடை அணிந்து வந்த இருவர், பஞ்சவர்ணத்தின் உடலில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறி, அவரிடமிருந்து 5 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுள்ளனர். • அதேபோல் அவரது மருமகளிடம் அவருக்கு பொன் தோஷம் இருப்பதாகவும், அதற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டுமெனவும் கூறி, ஒரு பவுன் தங்க தோடு மற்றும் அரைப்பவுன் மோதிரம் ஆகியவற்றை பெற்றுள்ளனர். • பின்னர் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர்களை, சிறிது நேரத்திற்கு பின் தொடர்புகொள்ள இயலவில்லை. • இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும், போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்