தற்போதைய செய்திகள்

பணத்திற்காக கார் விற்பனையாளர் கடத்தல்... ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

தந்தி டிவி
• பணத்திற்காக கார் விற்பனையாளரை கடத்திய அவரது நண்பர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்துவரும் இவர், தனது நண்பரான ஆத்திக் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்திவந்ததாக தெரிகிறது. • இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சகாதீனை, ஆத்திக்கின் நண்பர்கள் கத்தியை காட்டி, காரில் கடத்திச் சென்று, அவரது மனைவியிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். • இதனைத் தொடர்ந்து அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கணவரை மீட்ட நிலையில், தன்னை கடத்தியதாக சகாதீன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • இந்த நிலையில், ஆத்திக் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்