தற்போதைய செய்திகள்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆவின் பெண் ஊழியர் பால் பண்ணை மாடியிலிருந்து குதித்ததால் அதிர்ச்சி - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை ஆவினில் வேலைவாய்ப்பு மூலமாக கடந்த 2021ஆம் ஆண்டு 47 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். • இந்த 47 பேரும் கடந்த ஜனவரி மாதம் முறைகேடு செய்ததாக, முன் அறிவிப்பு இன்றி ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. • இதற்கு உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த நிலையிலும், இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி தொடர்பான அறிவிப்பு இல்லாததால், ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர். • இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் மகாலட்சுமி என்பவர், கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். • பின்னர் ஆவின் பால்பண்ணை மாடியில் இருந்து குதித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்