தற்போதைய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவர், அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கண்காணிப்பு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அற்ப காரணங்களுக்காக காப்பீட்டு கோரிக்கை தொகை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை