தற்போதைய செய்திகள்

அரச மரத்திற்கு ரூ.64 லட்சம் செலவு... 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவல்... எதற்கு தெரியுமா?

தந்தி டிவி
• இரண்டாயிரத்து 500 வருடங்களுக்கு முன்பு, வட இந்தியாவில் ஒரு மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படுகிறது. • அசோக சக்ரவர்த்தி, அந்த மரத்தின் கிளை ஒன்றை இலங்கையின் அனுராதபுர மன்னருக்கு பரிசாக அனுப்பி, அங்கு அதை நடச் செய்தார். • 2012இல் இந்தியா வந்த அன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனுராதபுரத்தில் உள்ள மரத்தின் கிளை ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தார். • அதை மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சீ ஸ்துபா அருகே, அன்றைய மத்திய பிரதேச முதல்வரின் முன்னிலையில் நட்டார். • அதற்கு மத்திய பிரதேச அரசு, ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அளித்து பராமரித்து வருகிறது. • இதுவரை சுமார் 64 லட்சம் ரூபாய் பாதுகாப்பிற்கும், நீர் பாய்ச்சவும் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. • இரும்பு வேலி பாதுகாப்பு வேலிக்குள் உள்ள இந்த மரத்திற்கு, தீயணைக்கும் எஞ்ஞின் மூலம் நீர் பாய்ச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்