தற்போதைய செய்திகள்

மதுவந்தி வீட்டை விற்றதால் அதிர்ச்சி - நிதி நிறுவனம் மீது பரபரப்பு புகார்

தந்தி டிவி

சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடிகை மதுவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், சுமார் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடனை சரியாக கட்டவில்லை என கூறி, நீதிமன்றத்தின் உதவியுடன் மதுவந்தியின் வீட்டை நிதி நிறுவனத்தினர் பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து, வீட்டில் உள்ள பொருட்களை மதுவந்தி எடுக்க தாமதமானதால் வீட்டு பொருட்களை எடுத்து நிதி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வைத்து வீட்டை விற்றுள்ளனர். இந்நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தனக்கு தெரியாமலே பொருட்களை எடுத்து வைத்து வீட்டை விற்றுள்ளதாக கூறி நிதி நிறுவனத்தினர் 10 பேர் மீது மதுவந்தி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்